ADVERTISEMENT

பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொலை... ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது...

12:03 PM Nov 19, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீதும் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை ஐந்து மணியளவில், நக்ரோட்டாவில் இருந்து ஜம்முவை நோக்கி வந்த ட்ரக் ஒன்றை பன் சுங்கச்சாவடி அருகே பாதுகாப்புப் படையினர் சோதனை செய்துள்ளார். அப்போது அதில் இருந்த நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கு பாதுகாப்பு படையினர் கொடுத்த பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதோடு, பன் சுங்கச்சாவடி பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT