Advertisment

சரவெடிகளுக்குத் தடை... போலீசாரே பொறுப்பு... உச்சநீதிமன்றம் அதிரடி!

Ban on Saravedis .. Police are responsible ... Supreme Court takes action!

Advertisment

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில், தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டால் அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் கொண்ட பட்டாசுகளைத் தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை.விதிக்கப்படுகிறது. போலி பசுமை பட்டாசுகளை விற்றால் உற்பத்தியாளர்களின் உரிமை ரத்து செய்யப்படும்.

கொண்டாட்டம் என்பது அடுத்தவரின் உடல்நலத்தை விலையாகக் கொடுக்கும் வகையில் இருக்கக்கூடாது. சரவெடிகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. சரவெடிகளைத் தயாரிக்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது. தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் போலீசாரே பொறுப்பேற்க வேண்டும். இந்த உத்தரவுகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்யவேண்டும்எனஉச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Festival deepavali supremecourt crackers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe