nnn

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் காலாவதியான கடலை மிட்டாயை வழங்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது கர்நாடக அரசு.

Advertisment

கர்நாடகாவில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடலை மிட்டாய் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மாணவர்களுக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கடலை மிட்டாயில் அதிகப்படியான இனிப்பு மற்றும் கொழுப்புச்சத்து இருந்ததோடு, அதிக நாட்களாக மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் சேமிப்பு கிடங்கில் இருந்துள்ளது. இதனால் மாணவர்களுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்த கடலை மிட்டாய்கள் காலாவதியானது.

Advertisment

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கடலை மிட்டாய் வழங்குவதை கர்நாடக அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. கடலை மிட்டாய்க்கு மாற்றாக வாழைப்பழம் அல்லது முட்டை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது கர்நாடக அரசு.