Advertisment

ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்தை கைது செய்ய மீண்டும் தடை நீட்டிப்பு !!

inx

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர்ப.சிதம்பரம்முன்ஜாமீன் குறித்த விசாரணையில் மேலும்அடுத்த மாதம் ஆகஸ்ட் 1 தேதிவரை கைது செய்ய தடை நீட்டிக்கபட்டுள்ளது.

Advertisment

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுன முறைகேடுகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போதுஜாமீனில்உள்ளார்.

Advertisment

மேலும் இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையில் ஜூலை 3 -ஆம் தேதிவரை அவரை கைது செய்ய நீதிமன்றம்தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், கைது செய்ய தடை நீட்டிப்பு காலம் ஆகஸ்ட் மாதம் 1 தேதிவரை நீடிக்கப்பட்டு வழக்கின் விசாரணை ஆகஸ்ட் மாதம் 2 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

cpi highcourt INX media
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe