sabarimala

Advertisment

சபரிமலையில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டா் அனூஃப் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாதம் பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக குறிப்பிட்ட வயது பெண்கள் அங்கு செல்வதை தடுக்கும் விதமாக பெண்களும் இந்து அமைப்புகளும் பத்தனம் திட்ட, நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் பேராட்டங்களில் ஈடுபட்டனா்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அப்போது மூன்று தொலைகாட்சி பெண் நிருா்கள் தாக்கப்பட்டதோடு அவா்களின் வாகனங்கள் உடைக்கப்பட்டன. இதனை தொடா்ந்து போலிசுக்கும் போராட்டகாரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கல் எறியும் லத்தி சார்ஜ் சம்பவமும் நடந்தது. இதனால் நிலக்கல் மற்றும் பம்பை போராட்டகளமாக மாறியது.

22-ம் தேதி வரை சபரிமலை நடை திறந்து இருக்கும் என்பதால் நாளையும் அதனை தொடா்ந்தும் இதே போல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க எலவுங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் 30 கி.மீ சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக பத்தனம்திட்ட கலெக்டா் அறிவித்துள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சபரிமலையில் 144 தடை என்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.