/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thackeray-statue-std.jpg)
மராட்டிய அரசியலில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர் பால்தாக்கரே. சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே கடந்த 2012-ம் ஆண்டு தனது 86-வது வயதில் மரணம் அடைந்தார். பால்தாக்கரேக்கு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தார். அதன்படி அந்த பகுதியில் உள்ள மேயர் மாளிகை அமைத்துள்ள பகுதி நினைவிடத்திற்காக ஒதுக்கப்பட்டது. இந்த நினைவிட பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான இடமான 11,550 சதுர மீட்டர் இடம் சிவசேனா தலைவரான ராஜ்தாக்கரேவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இந்த நினைவிடமானது பால்தாக்கரே அறக்கட்டளை மூலம் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)