பட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொலை... பதறவைத்த சிசிடிவி காட்சிகள்...

Ballabhgarh incident accused arrested

பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் சாலையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று தேர்வு எழுதுவதற்காக அப்பகுதியில் உள்ள கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு காரில் இருவர் வந்துள்ளனர். அதில் டௌசீப் என்ற இளைஞர் காரைவிட்டு இறங்கி, அந்த மாணவியைத் தனது வாகனத்துக்குள் ஏற்ற முயன்றுள்ளார். ஆனால், அவர் வாகனத்தில் எற மறுத்ததைத் தொடர்ந்து, அந்த மாணவியைத் தனது கையிலிருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு டௌசீப் அங்கிருந்து காரில் ஏறித் தப்பியுள்ளார்.

இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து போலீஸார் விசாரணையை வேகப்படுத்திய சூழலில், இதில் சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், "இந்த நபர்கள் இருவரும் எனது மகளைத் தொந்தரவு செய்வதாக நாங்கள் முன்பே புகார் செய்தோம், ஆனால், இப்போது அவர்கள் என் மகளை கொன்றேவிட்டார்கள்" என்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

haryana
இதையும் படியுங்கள்
Subscribe