/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_36.jpg)
கர்நாடக மாநிலம் பெங்களூரு பையனஹள்ளி ரயில் நிலையத்தின் முக்கிய நுழைவுவாயில்ஒன்றில் நேற்று முன்தினம்பிளாஸ்டிக் பேரல் ஒன்றில் இருந்து துர்நாற்றம்வீசி உள்ளது. இதனைத்தொடர்ந்துரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே போலீசார் அந்த பிளாஸ்டிக் பேரலை திறந்து பார்த்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இதுகுறித்துதீவிர விசாரணையில் ஈடுபட்ட ரயில்வே போலீசார் ரயில்நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் பிளாஸ்டிக் பேரலை அவசர அவசரமாகரயில் நிலையத்தில்இறக்கி வைத்து விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேலும் ஆட்டோவில் வந்த மர்ம நபர்பற்றிய விபரமும், பேரலில் இருந்த பெண்ணின்விபரம் பற்றியும் போலீஸ்தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவேகடந்த ஜனவரிமாதம்பெங்களூருவில் உள்ள எஸ்வந்த்பூர்ரயில் நிலையத்தில் இதேபோன்று ஒரு பெண்ணின் உடல்கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக இதே போன்று நடைபெற்று உள்ளது பெங்களூருமக்கள்மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us