Advertisment

பட்டப் பகலில் துணிகரக் கொள்ளை; சினிமாவை மிஞ்சும் வீடியோ காட்சி

Bagheer robbery in broad daylight; A video display that surpasses cinema

மகாராஷ்டிராவில் நகைக்கடை ஒன்றில் பட்டப்பகலில் சினிமா காட்சிகளில் வருவதைப் போல துப்பாக்கி முனையில் திருடர்கள் நகைகளைத்திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் செயல்பட்டு வரும் பிரபலமான நகைக்கடை ஒன்றில் துணிகரமாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் அங்கிருந்த கடை ஊழியர்களை மிரட்டித்தாக்கி விட்டு மூட்டை மூட்டையாக நகைகளைத்திருடிச் சென்றனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துசமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் கருப்பு நிற உடை அணிந்த ஒருவன் கையில் துப்பாக்கியுடன் மிரட்ட, உடன் வந்தவர்கள் மூட்டை மூட்டையாக நகைகளைக் கட்டிக்கொண்டு டூவீலரில் அங்கிருந்து செல்கின்றனர்.

Advertisment

திருடப்பட்ட நகைகள் இரண்டு கோடி ரூபாய் மதிப்புடையதுஎனத்தெரியவந்துள்ளது. மொத்தமாக நான்கு பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், இரண்டு பேரை கைது செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பட்டப் பகலில் நகைக் கடையில் புகுந்து கொள்ளை அடிக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Maharashtra police Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe