நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வண்ணங்களின் திருவிழாவான அந்த பண்டிகையின் போது இளைஞர்கள் சாலையில் வாகனத்தில் சென்ற பெண்கள் மீது அத்துமீறி வண்ணப்பொடிகளை பூசிய சம்பவம் இணையதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஹோலி பண்டிக்கை தென்மாநிலங்களை விட வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தில்லி முதலிய வட மாநிலங்களில் சிறப்பான முறையில் இந்த பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஹோலி கொண்டாட்டத்தின் போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் மீது இளைஞர்கள் அத்துமீறி வண்ணப்பொடிகளை பூசியுள்ளார்கள். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அவசர வேலையாக செல்பவர்களை கொண்டாட்டம் என்ற பெயரில் அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு ஆதரவாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.