back on Play Store PAYTM

Advertisment

பணப்பரிமாற்ற செயலியான 'பே டி எம் செயலி' (Paytm App) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது பிளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக விதிமீறல், காரணமாக பே டி எம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்த 'பே டி எம்' நிறுவனம், "வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். தற்காலிகமாக நீக்கப்பட்ட பே டி எம் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் சேர்க்கப்படும்" என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பே டி எம் செயலி சேர்க்கப்பட்டதாக 'பே டி எம்' நிறுவனம் தெரிவித்துள்ளது.