ஹரியானாவில் இந்த வருடத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி காமன்வெல்த் போட்டிகளில் தேசத்துக்காக பதக்கங்களை குவித்த பிரபல மல்யுத்த வீராங்கனை பபிதான் போகத், தந்தை மஹாவீர் போகத்துடன் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

Advertisment

babita phoghat

கட்சியில் சேந்தவுடன் செய்தியாளர்களிடம் பபிதா, “நான் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய விசிறி, ஆதரவாளர். 2014ஆம் ஆண்டிலிருந்து அவரின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன். பிரதமர் இந்த தேசத்திற்காக நிறைய சேவைகளை செய்துள்ளார். நான் விளையாட்டில் தீவிரமாக இருந்ததால், பாஜகவில் என்னை இணைந்துக்கொள்வது தாமதமாகிவிட்டது. இப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து வரலாற்று சிறப்பு மிக்க விஷயத்தை செய்துள்ளது. இத்தருணத்தில் கட்சியில் இணைவதில் எனக்கு மகிழ்ச்சியாகும். என்னைப்போன்று பலரும் பா.ஜனதாவில் இணைய விரும்புவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்” என்று பேசியுள்ளார்.

Advertisment

கடந்த 2016ஆம் ஆண்டு அமீர்கான் நடித்த தங்கல் படத்தின் கதை பபிதா, கீதா போகத் சகோதரியும், அவருடைய தந்தஒ மஹாவீர் போகத்தும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.