Advertisment

நேரு, மோடி எப்படி பிரதமர் ஆனார்கள்? ரகசியம் கூறும் பாபா ராம்தேவ்...

Advertisment

gfhgfhfhg

சட்டீஸ்காரின் ராய்ப்பூர் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அவர் அங்கிருந்த கூட்டத்தினரிடையே பேசும்பொழுது, ஜவஹர்லால் நேரு, மோடி ஆகிய இருவரும் எப்படி பிரதமர் ஆனார்கள் என கூறினார். அப்போது பேசிய அவர், 'யோகா பயிற்சி பெற்றதால் தான் அவர்கள் இருவரும் பிரதமரானார்கள். யோகாவைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே ராஜயோகம் அனுபவிப்பார்கள். நேரு யோகா பயிற்சியை வெகுநாட்களாக செய்து வந்ததால், அவரது ராஜயோகம் நன்றாக இருந்தது. அதுபோல இந்திரா காந்தி யோகாவைப் பின்பற்றியவராகவும் இருந்தார், அதன் காரணமாகவே அவர் பிரதமரானார். அதேபோல் தான் மோடியும், டீ விற்றவரின் மகனான அவர் யோகா செய்ததால் பிரதமராக ஆனார். அதுபோல இப்போது ராகுல் காந்தியும் யோகா பயிற்சி பெற்று வருகிறார், அதனால் நாட்டின் சிறந்த அரசியல் பதவியை ஆக்கிரமிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் அவருக்கு உருவாகி இருக்கிறது' எனவும் அவர் கூறினார்.

Advertisment

babaramdev modi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe