baba ram singh

Advertisment

மத்திய அரசின்வேளாண்புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராகடெல்லியில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாயிகளும் இன்னும் சுமூகமுடிவு எட்டப்படாததால் 22 வதுநாளாகபோராட்டம் தொடர்கிறது.

இந்தநிலையில், ஹரியானாமாநிலத்தைச் சேர்ந்தசீக்கியமதகுருபாபாராம்சிங், விவசாயிகளின் போராட்டதிற்கு ஆதரவாகதற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் எழுதியகுறிப்பில், விவசாயிகளுக்கு அரசு நீதி வழங்காததுகொடுமையாகும் எனகூறியுள்ளார். மேலும், தனது தற்கொலை, விவசாயிகளுக்கு ஆதரவான, கொடுமைக்கு எதிரான குரல் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனதுஇறுதி குறிப்பில்,“விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக சாலைகளில் போராடுகின்றனர். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் நீதி வழங்கமால் இருப்பது கொடுமை. துன்புறுத்தலை சகித்துக்கொள்வது பாவம், ஒடுக்கி வைத்தால்என்பதும் பாவம். சிலர்கொடுமைகளுக்கு எதிராகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் நின்றனர். அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தங்கள் விருதுகளை திரும்ப அளித்தனர். நான் அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராகதற்கொலை செய்து கொள்கிறேன். இது கொடுமைக்கு எதிரான மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல்" எனகூறியுள்ளார்.

Advertisment

பாபாராம் சிங் மறைவுக்குராகுல்காந்திஇரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிடிவாதத்தை விட்டுவிட்டு, உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள்கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் அவல நிலையைக்கண்டுபாபா ராம் சிங் ஜி தற்கொலை செய்து கொண்டார். துக்ககரமான இந்த நேரத்தில் அவருக்குஎன்னுடைய இரங்கலும், அஞ்சலியும்.பல விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். மோடி அரசாங்கத்தின் கொடூரம்எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டது.பிடிவாதத்தை விட்டுவிட்டு உடனடியாக விவசாய எதிர்ப்பு சட்டத்தை வாபஸ் பெறுங்கள்" எனகூறியுள்ளார்.