ADVERTISEMENT

துணை சபாநாயகர் குறித்து சர்ச்சை பேச்சு... அவையிலேயே மன்னிப்பு கேட்ட எம்.பி...

05:28 PM Jul 29, 2019 | kirubahar@nakk…

கடந்த 25 ஆம் தேதி மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் நடைபெற்றபோது சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆசம் கான், துணை சபாநாயகர் ரமாதேவியிடம் ஆபாசமாக பேசியது பலத்த எதிர்ப்பை பெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

துணை சபாநாயகராக ரமாதேவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது முத்தலாக் மசோதாவுக்கு எதிராக ஆசம் கான் பேசினார். அவர் பேசும்போது அங்கிருந்த உறுப்பினர்கள் கூச்சலிட்டதால், இதுகுறித்து ரமாதேவியிடம் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ரமாதேவி, கூச்சலிடுபவர்களை கண்டுகொள்ளாமல், தன்னை பார்த்து பேசும்படி கூறினார். அதற்கு ஆசம் கான் கூறிய பதில் அவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் உடனடியாக அவரது கருத்தை திரும்ப பெறவேண்டும் என ரமாதேவி வலியுறுத்தினார். ஆனால், ஆசம் கான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் ஆசம் கானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. இந்நிலையில் இன்று மக்களவை கூட்டம் தொடங்கியதும் ஆசம் கான் அனைவரது முன்னிலையிலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்.

இன்று காலை சபாநாயகர் ஓம் பிர்லாவை, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆசம்கான் ஆகியோர் அவரது அறையில் சந்தித்து பேசினர். அதனையடுத்து துணை சபாநாயகர் ரமா தேவியும், ஓம் பிர்லாவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, இன்று மக்களவை தொடங்கியதும், அனைவரது மத்தியிலும் ஆசம்கான், மன்னிப்பு கோரினார். இதன் பின், அவை நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெற்றன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT