Advertisment

வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்... நாடாளுமன்ற உறுப்பினரின் சர்ச்சை கருத்து...

நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஆசாம் கான் தெரிவித்துள்ளார்.

Advertisment

azam khan about onion price

வெங்காய கிடங்கில் பணத்தை திருடுவதை விடுத்து வெங்காயத்தை திருடும் அளவுக்கு வெங்காய விலை இன்றைய சூழலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே வட மாநிலங்களில் வெங்காய கிடங்குகளை பாதுகாப்பு வழக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது கர்நாடகாவில் வெங்காய விவசாயிகள் ஆயுதங்கள் ஏந்தி வெங்காய பயிர் நிலத்திற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Advertisment

இந்த சூழலில்வெங்காய விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஆசாம் கான், "வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள், அதை சாப்பிட வேண்டிய கட்டாயம் என்ன? எங்கள் சமண சகோதரர்கள் சாப்பிடுவதில்லை. வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள், பூண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள், இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துங்கள், அனைத்தும் சேமிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

azam khan onion
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe