Skip to main content

அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக 'தங்க செங்கல்'- முகலாய பரம்பரையை சேர்ந்த இளவரசர் அறிவிப்பு!

Published on 10/11/2019 | Edited on 17/11/2019

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று காலை (10.30) மணியளவில் (09/11/2019) தீர்ப்பு வழங்கியது. அதில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் மத்திய அரசுக்கு சொந்தம் என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், அதேசமயம் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு சுமார் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், உத்தரப்பிரதேச அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

AYODHYA TEMPLE GOLD BRICK CONSTRUCTED Prince Yakub


இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக சன்னி வஃ க்ப் வாரியம் வரவேற்றுள்ளது. மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முகலாய அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபுதீன் டுக்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது " அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சகோதரத்துவம் வலுப்பெறும் என்று கூறினார். அதேபோல் அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக தங்கத்தால் ஆன செங்கல் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்."


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அயோத்தி ராமருக்கு ஒரு மணி நேரம் ரெஸ்ட்’ - அறக்கட்டளை அதிரடி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 Trust Management announced Ayodhi Ram needs an hour every day

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது, “ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 முதல் 1:30 வரை மூடவுள்ளோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Next Story

‘மனிதம் தாண்டி புனிதம் இல்லை’ - ஒற்றுமைக்கு அடையாளமான இஸ்லாமிய குழந்தை! 

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
  Islamic child is a symbol of unity!

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டும் ராமர் கோவில் கட்டப்பட்டு, அதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 22ம் தேதி திறந்து வைத்தார். இந்தத் திறப்பு விழாவிற்காக, கோயில் அறக்கட்டளை சார்பாக நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பிற்கு நாடு முழுவதும், ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுப்பை அறிவித்தது ஒன்றிய அரசு. அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22 ஆம் தேதி அன்று குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். 

இப்படியான ஏற்பாடுகளுடன், ஜனவரி 22ம் தேதி கோவில் கருவறையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச ஆளுநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோயில் திறப்பு விழா நடைபெற்றது. ராமர் கோயில் திறப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஒரு இடத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதாகவும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

  Islamic child is a symbol of unity!

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த ஃபர்சானா எனும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி வந்து அவர் ஃபிரோசாபாத் மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 22ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவர் நவீன் ஜெயின், “குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்” என்று தெரிவித்தார். 

ராமர் கோயில் திறப்பு அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு, அவரின் பாட்டி ஹுஸ்னா பானு, ‘ராம் ரஹிம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இது குறித்து ஹுஸ்னா பானு தெரிவிக்கையில், “இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கவே இந்தப் பெயரை சூட்டினேன்” எனத் தெரிவித்துள்ளார்.