gfbfgbf

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும் என பரம தர்ம சபை கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. துவாரகா பீடம் மற்றும் பத்ரிநாத் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாரான சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி இதனை தெரிவித்துள்ளார்.

Advertisment

உத்தரபிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் ஜனவரி 28 முதல் மூன்று நாட்கள் சாதுக்களின் உயரியக் கூட்டமாகக் கருதப்படும் பரம தர்ம சபை கூட்டம் நடைபெற்றது. சுமார் 400 சாதுக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அயோத்தியில் 144 தடை உத்தரவு உள்ளதால் 5 பேர் ஒன்றாக கூடினால் கைதுசெய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 4 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து செங்கல்லுடன் சென்று அடிக்கல் நாட்டும் இடத்தில் ஒன்று சேர்ந்து அடிக்கல் நாட்டபோவதாக ஸ்வரூபானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சால் அயோத்தி பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.