Advertisment

நாளை காலை அயோத்தி வழக்கில் தீர்ப்பு...!!

அயோத்தி வழக்கில் நாளை காலை பத்து முப்பது மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisment

நாடுமுழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி வழக்கில் எப்பொழுது தீர்ப்பு வழங்கப்படும் என்றுஎதிர்பார்ப்புமேலோங்கியிருந்தது. இந்நிலையில் நாளை காலை உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு பத்து முப்பது மணிக்கு தீர்ப்பை வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

ayodhi

வருகின்ற 17ம் தேதியுடன் தலைமை நீதிபதிரஞ்சன் கோகாய் பணிக்காலம் நிறைவடையும் நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் நாளை உச்சநீதிமன்றத்தின்முழுமையான சிறப்பு அமர்வு தீர்ப்பு வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு முன்னெச்சரிக்கை பாதுக்காப்பு நடவடிக்கையாகமாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனும் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

verdict supremecourt Ayodhya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe