அயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்முடிவு.

Advertisment

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த (09/11/2019) தீர்ப்பு வழங்கியது.

Advertisment

AYODHYA CASE SUPREME COURT JUDGEMENT APPEAL ISLAMIC ASSOCIATION DECIDE

அதில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் மத்திய அரசுக்கு சொந்தம் என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், அதேசமயம் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு சுமார் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், உத்தரப்பிரதேச அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்று இருந்தனர். குறிப்பாக சன்னி வஃ க்ப் வாரியம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

AYODHYA CASE SUPREME COURT JUDGEMENT APPEAL ISLAMIC ASSOCIATION DECIDE

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இந்திய முஸ்லிம் தனிச்சட்டவாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் சீராய்வு மனு தயார் செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்.

Advertisment