அயோத்தி வழக்கில் புதிய திருப்பம்... ஆதாரங்களை சமர்ப்பித்த ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா விராஜ்மான் ஆகிய அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

ayodhya case evidence in supreme court

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்பின் பல ஆண்டுகளாக நடந்த சமரச முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இந்த வழக்கை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உச்சநீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து வருகிறது.

அந்த வகையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதி, "அயோத்தியில் கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டதா? அப்படியென்றால் அதற்கான ஆதாரங்களை வழங்குங்கள்" என உத்தரவிட்டார்.

அதற்கு பதிலளித்த ராம் லல்லா விராஜ்மான் அமைப்பின் வழக்கறிஞர், கடந்த 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர், சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்ததாக கூறினார். மேலும், அவரது ஆய்வின் போது இந்து தெய்வங்களின் உருவங்கள் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் இதுதொடர்பான சில புகைப்பட ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

Ayodhya babri masjid Ram mandir
இதையும் படியுங்கள்
Subscribe