Advertisment

சுற்றுலா பயணிக்கு உதவினால் மத்திய அரசு விருது... மத்திய அமைச்சர் அறிவிப்பு...

இன்று உலக சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் பிரஹலாத் படேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

award for people who helps tourists in india

அப்போது பேசிய அவர், "அடுத்த ஆண்டு முதல் ஒரு புதிய பிரிவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு உதவுபவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு சார்பில் சிறப்பு விருது ஒன்று வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. இந்தியா வரும் சில சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் பெரிய இடர்பாடுகளில் சிக்கிவிடுவார்கள். அதுபோன்ற அவசர சூழலில் சுற்றுலாப் பயணிகளின் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றி, இக்கட்டான நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நபர்களை கௌரவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

India Tourists
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe