ADVERTISEMENT

சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ளாதீர்கள்- மத்திய அரசு வலியுறுத்தல்!

05:51 AM Feb 25, 2020 | suthakar@nakkh…

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


ADVERTISEMENT


சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அப்போது சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா முதலிய நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் கடுமையாக சோதனை செய்யப்பட்டே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டடுள்ளது. மேலும் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு தேவையற்ற பயணத்தை செய்யாதீர்கள் என்றும் இந்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT