பெங்களூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் தானியங்கி சலவை இயந்திரத்தின் பயன்களை விளக்கும் விதமாக அதனுடைய செயல்பாடுகளை வீடியோவாக ரயில்வே அமைச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரயில்வே -வை விரைவில் நவீனப்படுத்துவோம் என்று சில மாதங்களாகவே கூறிவரும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டோம் என்பதை தெரியப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் ஒன்று வேகமாக செல்வதை போலவும், அதன் இரண்டு புறங்களிலும் உள்ள பிரஷ் போன்ற அமைப்பு சுழன்று அதனை சுத்தம் செய்வது போல அந்த வீடியோ அமைந்துள்ளது. இரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இதன் மூலம் சில நிமிடங்களில் ரயிலை சுத்த செய்துவிட முடியும் என்று கூறப்படுகின்றது.