ரயில்வே நடைமேடையில் சீறிபாய்ந்த ஆட்டோ... காரணம் தெரிந்தால் சந்தோஷப்படுவீர்கள்!

மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, அவரது கணவர் மருத்துவமனைக்கு அவரை ரயில் மூலமாக அழைத்து செல்ல முடிவு செய்தார். ஆனால், வெகுநேரமாகியும் ரயில் கிளம்பவில்லை. கனமழையால் தண்டவாளங்கள் தண்ணீரில் முழ்கி உள்ளதால் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் செய்வதறியாது திகைத்த கர்ப்பிணி பெண்ணின் கணவர், ரயில் நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் உதவி கேட்டார்.

train

கர்ப்பிணி பெண் பிரசவ வலியில் இருக்கிறார் என்பதை கேட்டதும் அந்த ஆட்டோ டிரைவரும் எதையும் யோசிக்காமல் தன் ஆட்டோவை ரயில் நிற்கும் பிளாட்பாரத்திற்குள்ளேயே கொண்டு சென்றுவிட்டார். அங்கிருந்து பரசவ வலியில் துடிக்கும் அந்த கர்ப்பிணி பெண்ணை ஆட்டோவில் ஏற்றி சாலை மார்க்கமாகவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பிளாட்பாரத்திற்குள் ஆட்டோவை கொண்டு வருவது குற்றம் தான் என்றாலும் நடந்த சம்பவத்தை உணர்ந்த ரயில்வே போலீசார் சம்பவம் நடக்கும்போது ஆட்டோவை தடுக்கவில்லை. ரயில்வே பிளாட்பாரத்திற்குள் ஆட்டோ வந்து கர்ப்பிணி பெண்ணை ஏற்றி செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Train
இதையும் படியுங்கள்
Subscribe