Advertisment

பேருந்தின் மீது தாறுமாறாக மோதிய ஆட்டோ; வைரல் சிசிடிவி காட்சி

Auto that rammed into a private bus; Viral CCTV footage

தனியார் பேருந்து மீது ஆட்டோ ஒன்று வேகமாக மோதி விபத்தாகும் சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ளகல்லம்பலம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுள்ளது. அப்பொழுது கிளை சாலையிலிருந்து முக்கிய சாலைக்கு செல்ல ஆட்டோ முற்பட்டது. அதேநேரம் அந்த சாலையில் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோவானது தனியார் பேருந்து மீது பலமாக மோதி சுழன்றடித்து சாய்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் வெளியே தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்ட அக்கம் பக்கத்தினர்,தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

auto Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe