/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2754.jpg)
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் தபால்கார வீதியை சார்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தியாகு என்கிற தியாகராஜன் (38). இவரது மனைவி பச்சைவாழி (34). இத்தம்பதிக்கு லட்சுமிதேவி (4), ஆகாஷ் (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். தியாகு ஆட்டோ ஒட்டிக்கொண்டிருந்த நிலையில், அதிக கடன் ஆகியதால் தற்போது ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்திருக்கிறார். கடன் தொல்லையால் குடும்பத்திலும் அடிக்கடி பிரச்சனை இருந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1032.jpg)
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத நிலையில் அருகில் உள்ளவர்கள் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் வந்து பார்த்தபோது பச்சைவாழி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்து நிலையில் கிடந்ததுள்ளனர். மேலும், தியாகராஜன் தூக்கிட்டு இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தற்கொலை கடன் தொல்லையால் ஏற்பட்டதா அல்லது அவர்களது மரணத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர். மேலும், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)