சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆட்டோ டிரைவரின் செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சாலையில் ஆட்டோ ஒன்றை ஓட்டிச்செல்லும் டிரைவர் ஆட்டோ ஓடிக்கொண்டு இருக்கும்போதே,டயரை மாற்றுவதற்காக ஆட்டோவை ஒருபக்கமாக தூக்குகிறார். அப்பொழுது ஆட்டோ 2 டயரில் சென்று கொண்டிருக்கிறது. உடனே ஆட்டோவில் பின்னால் இருந்தவர் ஆட்டோ டயரை கழட்டுகிறார்.வேறு ஒரு ஆட்டோவில் வந்த ஒருவர் மாற்று டயரை வழங்க அந்த டயரை மாட்டுகிறார்.
இவ்வளவும் ஆட்டோ ரன்னிங்கில் இருக்கும்போதே நடக்கிறது. இந்த வீடியோவை ஹர்ஷ் கோங்கா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "நான் நிறைய டயர் மாற்றி பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோல ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலை பார்த்ததில்லை"என தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.