Skip to main content

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு ; போலீசார் விசாரணை

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nn

ஈரோட்டில் நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு சோலார் அருகே வெங்கடேசன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்த பேருந்துகள் அதே பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இதேபோல் மற்ற பேருந்துகளும் அதே பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்துகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூன்று பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. அதேபோல் ஒரு சுற்றுலா வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தது. இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

பெண் போலீசார் மீது தாக்குதல்; கணவன் கைது

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Attack on policewomen; Husband arrested

நேற்று காஞ்சிபுரத்தில் பெண் காவலரை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். அங்கு பணியாற்றி வரும் பெண் காவலரான டெல்லி ராணி வழக்கமாக நேற்று பணியை முடித்துவிட்டு உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி அருகே அவருடைய கணவர் மேகநாதன் வழிமறித்து டில்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை சரமாரியாக தாக்கினார்.

ரத்த வெள்ளத்தில் அலறியடித்த டெல்லி ராணி இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலர் டெல்லி ராணியை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீருடையில் இருந்த பெண் காவலர் கணவராலே கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெண் போலீசார் மீது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற மேகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.