Advertisment

பஸ் பாஸ் புதுப்பிக்க மாணவியுடன் சென்ற தந்தை மீது தாக்குதல்... வைரலாகும் வீடியோ!

 Attack on the father who went with the student to renew the bus pass... viral video!

Advertisment

பஸ் பாஸ் புதுப்பிக்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு சென்ற கல்லூரி மாணவியின் தந்தையை மாணவியின் முன்பே போக்குவரத்து துறை அதிகாரிகள் தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மாணவி ஒருவர் மகளிர் பஸ் பாஸை புதுப்பிக்க தந்தையுடன் கட்டுக்காடா போக்குவரத்து அலுவலகத்திற்கு தந்தையுடன் சென்றுள்ளார். அப்பொழுது கல்லூரி சான்று வேண்டுமென அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் ஏற்கனவே மாணவி தரப்பில் கல்லூரி சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கல்லூரி சான்று கேட்டதனால் மாணவியின் தந்தைக்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் கல்லூரி மாணவியின் கண்முன்னேயே தந்தையே கொடூரமாக அதிகாரிகள் தாக்கினர். இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் கட்டுக்காடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/3OnSly9NuVg.jpg?itok=cLbWnBfh","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe