Advertisment

முதல்வர் கான்வாய் மீது தாக்குதல்; பாதுகாப்பு வீரர்கள் இருவர் காயம்

 Attack on Chief Minister's Convoy; Two security officers were injured

Advertisment

முதல்வர் பயணித்த வாகனத்தின் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், மணிப்பூரின் ஜிரிபம் என்ற பகுதிக்குச் செல்லவிருந்த நேரத்தில் அவர் பயணித்த கான்வாய் வாகனத்தின் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் வீரர் என இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் குக்கி இன போராளிகள் மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 53-ல் பிரேன் சிங்கின் கான்வாய் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நான்கு போராளி அமைப்பினர் முதலமைச்சரின் மீது தாக்குதல் நடத்துவதற்காக முயன்றுள்ளனர். இந்த தாக்குதலில் அருகிலிருந்த பாதுகாப்பு வீரர்கள் இருவர் காயமடைந்திருக்கின்றனர். இதில் பாதுகாப்பு வீரர்கள் தரப்பில் பதில் தாக்குதல்நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக மணிப்பூர் முதல்வர் தாக்குதலில் இருந்து தப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident manipur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe