Advertisment

அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி

Atal Bihari Vajpayee

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல்களை டெல்லி எய்ம்ஸ் வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ சோதனைகளுக்காக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் ரந்தீப் குலேரியாவின் மேற்பார்வையின் கீழ் அவர் அங்கு சிகிச்சை பெற்றும்வருகிறார்.

Advertisment

பா.ஜ.க. சார்பில் இந்தியாவில் முதன்முறையாக பிரதமராக பொறுப்பேற்றவர் அடல் பிகாரி வாஜ்பாய்தான். 93 வயதான அவர், சிறந்த கவிஞரும் ஆவார். ஒவ்வொரு ஆண்டும் பிறந்ததினமான டிசம்பர் 25ஆம் தேதி வாஜ்பாயின் நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

Atal Bihari Vajpayee hospital prime minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe