மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் அவருக்கு இன்று நினைவிடம் திறக்கப்பட்டது.

Advertisment

vv

முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளான இன்று அவருக்கு டெல்லி ராஜ்காட் அருகே ஒன்றரை ஏக்கர் பரப்பில், 10 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த ’சதைவ் அதல்’ எனும் பெயரிட்ட அவரின் நினைவிடம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.