Advertisment

இந்திய கரோனா தடுப்பூசி நிறுவனத்திற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பிய இங்கிலாந்து நிறுவனம்!

serum institute of india

Advertisment

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும்,அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி, இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதனைபுனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தநிலையில், சீரம் நிறுவனத்திற்குஅஸ்ட்ராஜெனெகா நிறுவனம்லீகல் (legal) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சீரம் நிறுவனம், இங்கிலாந்திற்கு அனுப்ப வேண்டிய கரோனாதடுப்பூசிகளைஅனுப்ப தாமதப்படுத்தியதால்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு சீரம் நிறுவனம் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை அனுப்பாததால்,இங்கிலாந்துமற்ற நாடுகளுக்குத் தடுப்பூசி அனுப்ப முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனாதடுப்பூசியின் தேவை அதிகரித்திருப்பதால், கரோனா தடுப்பூசி ஏற்றுமதியைக் குறைக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியதே, இங்கிலாந்திற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட காரணம் எனகூறப்படுகிறது.

covishield coronavirus vaccine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe