உத்தரப்பிரதேசத்திலுள்ள பைசாபாத் மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை அம்மாநில அரசு மாற்றப்போவதாக அறிவித்தது. அதில் அலகாபாத் பெயரை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் பெயரை அயோத்தியா என்று பெயர் மாற்றப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், உபி மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நகரங்களில் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.