Advertisment

'இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை'-குற்றவாளி என்கவுண்டர்

 assault on two-and-a-half-year-old child' - Criminal encounter

இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

உத்தரபிரதேசம் மாநிலம் ஆலம்பாக் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தையை அதிகாலை நேரத்தில்தூக்கிச் சென்ற நபர் ஒருவர், குழந்தையைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் விசாரணையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தீபக் வர்மா என்பது தெரிந்தது. குற்றவாளி தீபக் வர்மாவை காவல்துறையினர் நெருங்கிச் சென்ற பொழுது பதிலுக்கு போலீசார் மீது தீபக் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், போலீசார் துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த தீபக் வர்மா மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது பெண் குழந்தையானது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட நபர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

women safety girl child Child Care uttarpradesh police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe