Advertisment

முன்னாள் அமைச்சர் படுகொலை; சல்மான் கான் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

Assassination of former minister; Heavy security at Salman Khan's house

மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisment

தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து இரு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உடைய கூட்டாளிகள் என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப்பை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் பல்வேறு கொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடி ஆவார். தற்பொழுது லாரன்ஸ் சிறையில் இருக்கும் நிலையில் பாபா சித்தி கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Advertisment

எப்படி சிறையிலிருந்து இந்த கொலையை திட்டமிட்டு லாரன்ஸ் நிறைவேற்றினார். சிறையில் தொலைபேசி வசதிஉள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் கிடைத்ததாஎன்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.மற்றொருவர் ஹரியானாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கும் லாரன்ஸ்க்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகப்படும் நிலையில் டெல்லியில் இருந்து சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மொத்தமாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கோணமாக மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் இந்த படுகொலை அரசியல் சார்ந்த கொலையாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திருக்கின்றனர். ஒய் பிளஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் அமைச்சர், அரசியல் பிரபலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒருவேளை பாபாசித்திக் கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் ஈடுபட்டிருப்பது உண்மையானால், ஏற்கனவே பிரபல நடிகர்சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் படுகொலை செய்யப்பட்டபாபா சித்திக்கிற்கு சல்மான் கான் நெருக்கமானவர்என்பதால் அவரதுபாதுகாப்பை உறுதி செய்வது என்ற அடிப்படையில் சல்மான்கான் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

police politics Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe