Skip to main content

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்- வெளியுறவுத்துறை அமைச்சகம்!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

அசாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டை நேற்று வெளியிட்டது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். அந்த பட்டியலில் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் இடம் பெறாதது, நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

ASSAM STATE OF COORDINATOR NATIONAL REGISTRATION NRC RELEASED IN MEA


அதில் இந்திய அரசு, அசாம் மாநில அரசு, அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஏஏஎஸ்யூ) மற்றும் அனைத்து அசாம் கன் சங்கிரம் பரிஷத் (ஏஏஜிஎஸ்பி) இடையே 1985- யில் கையெழுத்திடப்பட்ட அசாம் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த என்ஆர்சியின் (State Of Coordinator National Registration- NRC) நோக்கமாக உள்ளது.

ASSAM STATE OF COORDINATOR NATIONAL REGISTRATION NRC RELEASED IN MEA



அதனை தொடர்ந்து பேசிய ரவீஷ் குமார், தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும், ஏற்கனவே அந்த மக்கள் பெற்று வந்த சலுகைகள் தொடரும் என்று கூறினார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலே அசாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 



 

சார்ந்த செய்திகள்