Advertisment

கடையில் நிம்மதியாக ஓய்வெடுக்கும் புலி...வைரலாகும் புகைப்படங்கள்!

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மகாராஷ்டிரா, அசாம், குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, முக்கிய ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் சுமார் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் இது வரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

ASSAM PEOPLES AFFECTED IN HEAVY RAIN FALL, KAZIRANGA ZOO FULLY FLOOD

மேலும் இந்த மாநிலத்தில் உள்ள காசிரங்கா வனவிலங்குகள் தேசிய சரணாலயம் வெள்ளத்தில் முழ்கியுள்ளதால், பூங்காவில் உள்ள காண்டாமிருகங்கள், யானைகள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளை மீட்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளன. சில விலங்குகள் மேடான பகுதிக்கு செல்ல தொடங்கியுள்ளன.

Advertisment

ASSAM PEOPLES AFFECTED IN HEAVY RAIN FALL, KAZIRANGA ZOO FULLY FLOOD

அந்த மாநிலத்தில் பாகோரி வனச்சரகப் பகுதி அருகே ஹார்மோதிஎன்ற ஊரில் உள்ள ஒரு கடைக்குள் ராயல் வங்காளப் புலி ஒன்று நுழைந்தது. கடைக்குள் நுழைந்த புலி அங்கிருந்த ஒரு படுக்கையில் ஓய்வெடுக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே அசாம் மாநில மக்களுக்கு உதவுமாறு, அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIRAL PHOTOS TIGER STAY AT SHOP KAZIRANGA ZOO India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe