/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/degree-holder-art.jpg)
குண்டு வெடிப்புவழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும் இளைஞர் ஒருவர் முதுகலைப் பட்ட மேற்படிப்பில் முதலிடம் பிடித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஆர்.ஜி பருவ சாலையில்கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டவர் சஞ்சீப் தாலுக்தார் (வயது 29). கைது செய்யப்படும் போது, இவர் தாவரவியல் துறையில் ஆய்வில்நிறைஞர் என்ற ஆய்வு படிப்பை படித்துக்கொண்டிருந்தார். குண்டு வெடிப்பு சம்பவத்தில்கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டபோதும் சஞ்சீப் தனது படிக்கும் ஆர்வத்தை கைவிடாமல் முதுகலை சமூகவியல் பட்டத்தைத்தேர்ந்தெடுத்துப் படிக்கத்தொடங்கினார்.
இந்நிலையில் பட்டமேற்படிப்பின்இறுதித்தேர்வுமுடிவுகள் வெளியாகி, தற்போது முதுகலைசமூகவியல்பாடத்தில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை அம்மாநில ஆளுநரிடமிருந்துபெற்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us