Skip to main content

முதுகலை படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற குண்டுவெடிப்பு கைதி 

 

assam master degree in sociology gold medal 

 

குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும் இளைஞர் ஒருவர் முதுகலைப் பட்ட மேற்படிப்பில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஆர்.ஜி பருவ சாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டவர் சஞ்சீப் தாலுக்தார் (வயது 29). கைது செய்யப்படும் போது, இவர் தாவரவியல் துறையில் ஆய்வில் நிறைஞர் என்ற ஆய்வு படிப்பை படித்துக்கொண்டிருந்தார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதும் சஞ்சீப் தனது படிக்கும் ஆர்வத்தை கைவிடாமல் முதுகலை சமூகவியல் பட்டத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கினார்.

 

இந்நிலையில் பட்ட மேற்படிப்பின் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி, தற்போது முதுகலை சமூகவியல் பாடத்தில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை அம்மாநில ஆளுநரிடமிருந்து பெற்றுள்ளார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !