இஸ்லாமியர்கள் இடுகாட்டினை விரிவாக்கம் செய்வதற்காக இந்து குடும்பம் ஒன்று 1 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய சம்பவம் அசாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

assam hindu man donates land to islam cemetery

அசாமின் வடக்கு லக்கிம்பூரை ஒட்டியுள்ள கோரேஹகா கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகந்த பூயான். இவருக்கு சொந்தமான நிலத்திற்கு அருகிலேயே இந்துக்களை அடக்கம் செய்யும் இடுகாடு ஒன்றும், இஸ்லாமியர்களை அடக்கம் செய்யும் இடுகாடும் அமைந்துள்ளது. தொடர்ந்து பல வருடங்களாக இரு சமூகத்தினரும் அந்த பகுதியில் அடக்கம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாமியர்களின் இடுகாட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் இடுகாட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டனர். இதன் காரணமாக கருணாகந்த பூயானை அணுகி விலைக்கு நிலம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தனது 1 ஏக்கர் நிலத்தை இடுகாட்டினை விரிவாக்கம் செய்வதற்காக இலவசமாக வழங்கியுள்ளார். இதனையடுத்து மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் செயல்பட்ட கருணாகந்த பூயானை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா ஒன்றினை நடத்தியுள்ளனர் அப்பகுதி இஸ்லாமிய மக்கள்.