Skip to main content

ஐந்து பேரை மிதித்துக்கொன்று மக்களை பீதியடைய செய்த  'பின் லேடன்' உயிரிழப்பு!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

அசாம் மாநிலத்திலுள்ள கோல்பாரா பகுதியிலுள்ள ராங்ஜுலி என்னும் காட்டில்  மக்களை அச்சுறுத்தி வந்த பின் லேடன் என்ற காட்டு யானை, அப்பகுதி மக்கள் 5 பேரை மிதித்துக் கொன்றது. காட்டு யானையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், லேடனை பிடித்து சரணாயலத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
 

elephant

 

 

இதனையடுத்து காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை‌ மேற்கொண்டனர். ஆளில்லா விமானம் மூலம்‌ தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், ‌அந்த யானையை கடந்த 11 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, அதனை ஓரங் தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர். கிராம மக்களை இந்த காட்டுயானை அச்சுறுத்தி வந்ததனால் கிராம மக்களால் இதற்கு  'பின் லேடன்' என்று பெயர் வைத்துள்ளனர். பின்னர், பூங்காவில் ஒப்படைக்கப்பட்டவுடன் காட்டுயானைக்கு கிருஷ்ணா என்று பெயரை மாற்றிவைத்துள்ளனர்.  

பூங்காவில் கொண்டுவரப்பட்டவுடன் லேடன் எனும் கிருஷ்ணன் காட்டுயானைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. மீண்டும் காட்டிலேயே சுதந்திரமாக விட்டுவிடலாம் என்று வனத்துறையினர் ஆலோசனை யோசித்தனர்.ஆனால், கிராம மக்களோ காட்டுயானை இதுவரை ஐந்து பேரை மிதித்துக்கொன்றுள்ளது. மேலும் அது மீண்டும் மதம் பிடித்து சுற்றினால் எங்களுக்குத்தான் பிரச்சனை என்று மறுத்திருக்கின்றனர்.

இந்நிலையில் யானை லேடன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. பூங்கா நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் பின் லேடனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.