அசாம் மாநிலத்திலுள்ள கோல்பாரா பகுதியிலுள்ள ராங்ஜுலி என்னும் காட்டில் மக்களை அச்சுறுத்தி வந்த பின் லேடன் என்ற காட்டு யானை, அப்பகுதி மக்கள் 5 பேரை மிதித்துக் கொன்றது. காட்டு யானையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், லேடனை பிடித்து சரணாயலத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

Advertisment

elephant

இதனையடுத்து காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை‌ மேற்கொண்டனர். ஆளில்லா விமானம் மூலம்‌ தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், ‌அந்த யானையை கடந்த 11 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, அதனை ஓரங் தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர். கிராம மக்களை இந்த காட்டுயானை அச்சுறுத்தி வந்ததனால் கிராம மக்களால் இதற்கு'பின் லேடன்' என்று பெயர் வைத்துள்ளனர். பின்னர், பூங்காவில் ஒப்படைக்கப்பட்டவுடன் காட்டுயானைக்கு கிருஷ்ணா என்று பெயரை மாற்றிவைத்துள்ளனர்.

பூங்காவில் கொண்டுவரப்பட்டவுடன் லேடன் எனும் கிருஷ்ணன் காட்டுயானைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. மீண்டும் காட்டிலேயே சுதந்திரமாக விட்டுவிடலாம் என்று வனத்துறையினர் ஆலோசனை யோசித்தனர்.ஆனால், கிராம மக்களோ காட்டுயானை இதுவரை ஐந்து பேரை மிதித்துக்கொன்றுள்ளது. மேலும் அது மீண்டும் மதம் பிடித்து சுற்றினால் எங்களுக்குத்தான் பிரச்சனை என்று மறுத்திருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் யானை லேடன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. பூங்கா நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் பின் லேடனுக்கு அஞ்சலி செலுத்தினர்.