வரதட்சனை கொடுக்கத் தவறியதற்காக மனைவியின் உடலை தகனம் செய்யக் கூடாது என கணவருக்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சோகமான சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

Advertisment

assam dowry tragedy

ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டம், குச்சேயி கிராமத்தில் வரதட்சனை வாங்காமல் யாரும் திருமணம் செய்யக்கூடாது என்ற வழக்கம் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் திருமணத்தின் போது வரதட்சனையாக 2 மாடுகள், ஒரு ஆடு, மூன்று சேலைகள் தருவதாக அவரது குடும்பத்தினர் கூறியிருந்துள்ளனர். ஆனால், அதனை அந்த பெண்வீட்டார் கொடுக்கவில்லை என தெரிகிறது.

Advertisment

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அந்த பெண் இறந்துள்ளார். அவரது கணவர் தனது மனைவியின் இறுதி சடங்குகளுக்கான பணிகளை செய்து வந்துள்ளார். அப்போது அங்கிருந்த கிராம மக்கள் ஒன்றுகூடி, அந்த பெண் வீட்டார் வரதட்சணை தராததனால் அவரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண் இறந்து மூன்று நாட்கள் ஆகியும் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் கணவருக்கு அனுமதி தரவில்லை.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. தகவலறிந்து சென்ற போலீசார் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பெண்ணின் உடலை தகனம் செய்ய உதவியுள்ளனர்.

Advertisment