அசாம் மாநிலத்தில் இந்தாண்டுநடைபெற்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் 7-க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்து 'மகாஜோத்' (பெரும்கூட்டணி) என்ற பெயரில் மாபெரும்கூட்டணி ஒன்றை அமைத்தது. இருப்பினும் இந்த கூட்டணி தோல்வியைத்தழுவியது. பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைமையிலான 'மகாஜோத்' கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை(ஏ.ஐ.யூ.டி.எப்) மகாஜோத்கூட்டணியில் இருந்து விலக்கஅசாம் மாநில காங்கிரஸ் முடிவெடித்துள்ளது.
அண்மைக்காலமாக ஏ.ஐ.யூ.டி.எப் கட்சி தலைமையும், மூத்த தலைவர்களும்பாஜகவையும், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவையும்புகழ்ந்து வருவது காங்கிரஸ் மீதான பொதுமக்களின் பார்வையைபாதிப்பதால், ஏ.ஐ.யூ.டி.எப் கட்சியை கூட்டணியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக அசாம் மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.
அதேபோல் போடோலாந்து மக்கள் முன்னணி'மகாஜோத்' கூட்டணியில் இருக்க விருப்பமின்மையைவெளிப்படுத்தியுள்ளதால், அந்த கட்சியையும் கூட்டணியில் இருந்து முடிவெடுத்துள்ளதாக அசாம் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஏ.ஐ.யூ.டி.எப்பையும், போடோலாந்து மக்கள் முன்னணியையும்கூட்டணியில் இருந்து விலக்கும் முடிவை அசாம் காங்கிரஸ், காங்கிரஸின்மத்திய தலைமைக்கு தெரிவிக்கவுள்ளது.காங்கிரஸின்மத்திய தலைமை, அசாம் காங்கிரஸின்முடிவுக்கு ஒப்புதல் அளித்தால் ஏ.ஐ.யூ.டி.எப்பையும், போடோலாந்து மக்கள் முன்னணியும் அதிகாரப்பூர்வமாக 'மகாஜோத்' கூட்டணியில் இருந்து நீக்கப்படும்.
இதற்கிடையே 'மகாஜோத்' கூட்டணியில் இருந்து தங்களை நீக்க அசாம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது துரதிருஷ்டவசமானது என ஏ.ஐ.யூ.டி.எப் தெரிவித்துள்ளது.