அசாமில் கார்பி அங்லோங் பகுதியில் இன்று காலை 07.03 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதேபோல் இமாச்சல் பிரதேசத்தில் இன்று அதிகாலை 12.05 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.