ADVERTISEMENT

'எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டார் ' - மோடிக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியர் பேட்டி  

10:08 AM Mar 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்படும் திட்டமானது முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்றிலிருந்து (01.03.2021) 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தகுதியான அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கோவாக்சின் கரோனா தடுப்பூசியைப் பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார். புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா என்ற செவிலியர் கரோனா தடுப்பூசியைப் பிரதமர் மோடிக்கு செலுத்தினார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த செவிலியர் நிவேதா, “கரோனா தடுப்பூசி போடும்போது ‘எங்கிருந்து வருகிறீர்கள்’ என பிரதமர் மோடி கேட்டார். கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதைச் சொன்ன பொழுது, ‘வலியே தெரியவில்லை’ என மோடி கூறினார்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT