பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபாவின் வழக்கறிஞரான தீபிகா ராஜவத் நான் கொல்லப்படலாம், பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் என கூறியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/deepika_0.jpg)
காஷ்மீரிலுள்ளகதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபாஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்தகாரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சிறுமி ஆசிஃபாவிற்கு ஆதரவாக வாதாட இருக்கும் வழக்கறிஞர் தீபிகாராஜவத் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில்,"இந்த வழக்கிலிருந்து விலகி விடுங்கள் என எனக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. நான் எப்போதுவரை உயிருடன் இருப்பேன் என எனக்கு தெரியாது. நான் எப்போதுவேண்டுமானாலும் கொல்லப்படலாம், பலாத்காரம் செய்யப்படலாம். நான் ஆபத்தில் இருப்பதை உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளேன்" என கூறியுள்ளார்.
இந்த வழக்கில் 3 போலீசார் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)