hima das

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிய விளையாட்டு வீரர் ஹிமா டாஸ், வெள்ளிக்கிழமை (இன்று)அசாமில் கவுகாத்தி நகரில் நடக்கும் பாராட்டு விழாவிற்கு பின்இல்லத்திற்கு செல்லவிருக்கிறார்.

Advertisment

இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவெற்றிக்குப் பிறகு, ஹிமா தாஸ் வீட்டிற்கு முதல் முறையாக வர இருக்கும் நிலையில் கவுகாத்தி விமானநிலையத்தில் ரன்னிங் டிராக் போன்ற ரெட் கார்பெட் விரித்து வரவேற்புக்கு வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்படவிருக்கும் வரவேற்பு அலங்காரங்களை காவல்துறை உதவி ஆணையர் போஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

hima das

அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனவால் விமான நிலையத்தில் ஹேமாவை வரவேற்பார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்ற நிலையில் அங்கிருந்து அவர் சரசுஜாய் ஸ்டேடியத்திற்கு செல்கிறார். அதே நேரத்தில் டாக்டர் பூபேன் ஹஸிகா சமாதி க்ஷேத்திர மெமோரியலுக்கும் செல்லவிருக்கிறார். பின்னர் மாலையில், ஹிமாவுக்கு ஸ்ரீமந்த் சங்கராதேவ் கலகெஷெராவில் மாநில அளவிலான பாராட்டு விழா நடைபெற உள்ளது.

Advertisment